ஹைட்ரஜன் குண்டு என்ற பெயரில் அணு குண்டு பரிசோதனை செய்த வெற்றியை அணு விஞ்ஞானிகளுக்கு கேளிக்கை விருந்து அளித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொண்டாடினார். அணு குண்டு பரிசோதனை வெற்றி – ஆடல், பாடல், கேளிக்கை விருந்துடன் வடகொரிய அதிபர் கொண்டாட்டம் பியாங்யாங்: உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும்,
கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) கடந்த 3-ம் தேதி பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா,
பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன. தாங்கள் நடத்தியது அணு குண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை நடத்தினோம் என வடகொரியா சாதித்துவரும் நிலையில், நேற்று வடகொரியா பரிசோதித்த அணு குண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக, தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் சமீபத்தில் பரிசோதிக்கப்பட்ட அணு குண்டு 50 கிலோடன் அளவிலான அழிவாற்றலை கொண்டது (ஒரு கிலோ டன் என்பது பத்து லட்சம் கிலோ அளவிலான அழிவாற்றலை கொண்டது) என தெரிவிக்கப்பட்டது.
கோப்பு படம் அதிக சக்திவாய்ந்த அணு குண்டை வெற்றிகரமாக பரிசோதனை செய்வதில் உறுதுணையாக இருந்த விஞ்ஞானிகளுக்கு வடகொரியா தலைநகர் பியாங்யாங் நகரில் அதிபர் கிம் ஜாங் உன், ஆடல்,பாடல் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் மிகப்பெரிய விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் தனது மனைவி ரி சோல் ஜு-வுடன் கலந்து கொண்டு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததாக வட கொரியா அரசுக்கு சொந்தமான ரோடாங் சின்முன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இன்றைய நாளிதழில் இரண்டு பக்க அளவில் சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அணு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் இந்த மகத்தான சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த கிம் ஜாங் உன், மேலும் அதிகமான ஆற்றல்வாய்ந்த அணு குண்டுகளை தயாரித்து, உலக அரங்கில் அணுவல்லமையில் முக்கிய நாடாக வடகொரியாவை உயர்த்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-athirvu.com
மனுக்குலத்திற்கு மருட்டலாக இருக்கும் இந்தத் தீயசக்திகளை என்னவென்பது ?………….!!!