ராஜதந்திர வழிகளில் வட கொரியாவை பணிய வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

north Korea Bஸ்டாரஸ்பர்க் (பிரான்ஸ்), ஐநாவின் பாதுகாப்பு சபை நேற்று வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை பிரேரித்துள்ளது. இதில் எண்ணெய் பொருட்களை கப்பல்களில் அந்நாட்டிற்கு கொண்டு செல்வதும் அடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வட கொரியாவிடமிருந்து கோபமான பதிலை பெற்றுள்ளது. இதனிடையே ஸ்டாரஸ்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஐரோப்பிய ராஜதந்திர பிரிவின் தலைவர் பெட்ரிகா மொகேரினி பேசுகையில் இறுக்கமான, வலுவான தடைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் இதுவே வட கொரியாவை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டு வரும் என்றார். கடந்த வாரம் 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் புதிய தடைகளை ஏற்கனவேயுள்ள தடைகளுடம் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐரோப்பாவில் பணியாற்றும் வட கொரிய தொழிலாளர்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றன. இவர்கள் ஈட்டும் வருமானம் வட கொரியா தனது அணு ஆயுத சோதனைகளுக்கு பயன்படுதுவதாக கருதுகின்றன என்பதால் இந்த நடவடிக்கைத் தேவை என்கின்றன.

கொரிய தீபகற்பம் அணு ஆயுதங்களின்றி இருப்பதற்கு ராஜதந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றன. “ராணுவ நடவடிக்கை கெடுதல் விளைவிக்கக்கூடியது. அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அப்பிரதேசத்தில் போரினை பெரிதளவில் ஏற்படுத்தக்கூடியது. அதையும் கடந்து உலகம் முழுதும் அப்போரின் தாக்கம் உணரப்படக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருதுகின்றன.

-dailythanthi.com