20வது திருத்தச் சட்டத்தை தவற விட்டால் விமோசனம் கிடையாது: மனோ கணேசன்

Mano-Ganesan20வது திருத்தச் சட்டத்தை தவற விட்டால் விமோசனம் கிடைக்காது. எனவே, கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு திடன் கொண்டவர்களாக முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்,

தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டு, இலங்கை சமஷ்டி அதிகாரப் பரவலாக்கம் கொண்ட நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தனது நினைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

-puthinamnews.com

TAGS: