ஈழத்தின் புகழ்பூத்த இசைப்பேராசான் டாக்டர் நா.வி.மு நவரத்தினம், மற்றும் சர்வதேச விவசாய ஆய்வின் விஞ்ஞானியும் தற்போது பிரான்ஸ் கனடா நாடுகளில் வாழ்ந்து வருபவருமான முது முனைவர் கந்தையா தேவமனோகரன் ஆகிய இருவரையும் சென்னைப் பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இணைந்து சென்னையில் கௌரவித்துள்ளது.
சென்னையை தலைமையகமாக கொண்டியங்கும் பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் உலகத்தமிழ்ர் பண்பாட்டியக்கமும் கடந்த 20ம் திகதி அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் பெருங்கவிக்கோ வாமு சேதுதுராமன் தலைமையில் நடைபெற்ற அனைத்துலக தமிழர் பண்பாட்டு விழாவில் மேற்குறித்த இரு அறிஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாராட்டுவிழாவில் கலைமாமணி திருவள்ளுவனார், மறைமலை இலக்குவனார், மேனால் சென்னை மேயர் சா.கனேசன், திரைப்பட இயக்குனர் பாலுமணிவண்ணன் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மூத்த சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மற்றும் பேராசிரியர் உருசுவெல்ட், பேராசிரியர் வா.மு சே ஆண்டவர், தமிழ்களஞ்சிய ஆசிரியர் தஞ்சை கூத்தரசன், கலைமாமணி ஏர் வாடி ராதா கிருஸ்னன், கவிஞர் பேரவை நமச்சிவாயம், தமிழ் பண்பாட்டு பேரவை நெய்வேலி தங்கம், கவிராய சிங்கம் கண்மதியன், இசை தொழில்நுட்ப பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் சனகப்பிரியன், அரிமாசங்கத் தலைவர் பொறிஞர் தா.கு திவாகரன், தமிழ்மாமணி பரிமளா வள்ளுவனார், கற்கண்டு ஆசிரியர், முத்துக்கிருஸ்னன், நிலவுமலர் ஆசிரியர் முத்துக்கிருஸ்னர், முனைவர் கருப்பசாமி, கவிஞர் வீரபாலன், கவிமாமணிகள் மதியளகன், எழிலரசன் தமிழ்நாடு இலக்கிய எழுத்தாளர் சங்கத்தலைவர், தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தலைவர் தமிழ்நாடு இசைநாடக சங்கத்தலைவர் உட்பட பல புகழ் பெற்ற அறிஞ்ர்களும் மூத்த கலைஞர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முருகேஸ் நவரத்தினம் அவர்களுக்கு இசைப்பேரறிஞர் என்ற விருதை பெருங்கவிக்கோ வா.மு சே அவர்களும் அகில இந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழக மூத்த உறுப்பினர் கு.க செல்வம் அவர்களும் மேனால் சென்னை முதல்வர் மதிப்புயர் சா.கணேசன் அவர்களும் இணைந்து வழங்கினர். கந்தையா தேவ மனோகரன் அவர்களுக்கு வேளாண் விஞ்ஞானி உயர்விருதை பெருங்கவிக்கோ வா.மு.சே அவர்களும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மூத்த உறுப்பினர் கு.க செல்வம் அவர்களும் சா.கணேசன் ஆகியோரும் இணைந்து வழங்கினர்.;.
-tamilcnn.lk