நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
“சிறிலங்கா அரசாங்கம் ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நியூ யோர்க்கில் இடம்பெற இருக்கின்றது.
ஐ.நா பொதுச்சபையின் வருடாந்தக் பொதுக்கூட்டத்தில் பங்கெடுக்கும் சிறிலங்காவின் அரசுத் தலைவர், எதிர்வரும் 19ம் திகதியன்று உரை நிகழ்த்த இருக்கின்றார்.
இந்நிலையில், மைத்திரின் உரை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமவேளை, சிறிலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவம் வகையில் மக்கள் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இப்போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுத்து அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசு ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் அதன் குற்றங்களை பட்டியலிட இருக்கின்றார்.”
-puthinappalakai.net