விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது.
போரில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் இந்தப் பணியகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியினர் கூறுகின்றனர்.
தாம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று இதயபூர்வமாக நம்புகின்ற எந்த படைவீரரும், இதுபற்றி எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை.
இன்று கூட்டு எதிரணியினர் அவர்களின் அரசியல் நலன்களுக்காகவே, படையினர் சார்பாக அறிக்கைகளை வெளியிடுகின்றனர்” என்றும் தெரிவித்தார்.
-puthinappalakai.net