சௌதி அரேபியாவில், மத குரு ஒருவர், பெண்கள் வாகனங்களை ஓட்டத் தெரியாத அளவுக்கு முட்டாள்கள் என்று கூறி இணையத்தில் கண்டனங்களைத் தூண்டிய பின்னர், மத போதனைப் பணியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளார்.
“பெண்களுக்கு முதலில் அரை மூளைதான் இருக்கிறது, அதுவும் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்த பின்னால் , அவர்கள் மூளை கால் பகுதியாகிவிடுகிறது” என்று இப்போது வைரலாகப் பரவியிருக்கும் ஒரு வீடியோவில் , ஷேக் சாத் அல் ஹஜாரி என்ற அந்த மதகுரு கூறுகிறார்.
சௌதி அரேபியாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள அஸிர் மாகாணத்தில் ஒரு முன்னோடி மதப் பிரமுகராக விளங்கும் , ஷேக் ஹஜாரி ஆற்றிய ஒரு உரையில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.
இந்த மத குரு மத போதனைகள் செய்வதையோ அல்லது பிற மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ , அஸிர் மாகாண ஆளுநர் தடை செய்திருக்கிறார்.
சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு முறையான தடை ஏதும் இல்லை என்றாலும், அவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை. -BBC_Tamil
பெண்களை மதிக்கத்தெரியாத காட்டுமிராண்டிகள்! சிறிதும் விழிப்புணர்வு அற்ற ஜடங்கள். மார்க்கத்தின் பேரில் அசிங்கங்களை அரங்கேற்றும் அஞ்சடிகள்,புனித வேஷம் போடும் கபடதாரிகள்.சொர்க்கமே இவர்களது என்று சொல்லிக்கொள்ளும் நரகவாசிகள். …..ஹிம் …..இன்னும் என்னவென்று துப்பலாம் !?
ஹா ஹா ஹா — அவர்கள் பெண்களை அடக்கி ஆண்டே சுகம் கண்டவர்கள். வேறு என்ன சொல்வார்கள்? ஈனா ஜென்மங்கள். இவனை பெற்றவளும் அரை மூளையுடன் தான் பெற்றால் போல்.– தாய்மைக்கு உள்ள மதிப்பு இவ்வளவுதான்.