வட கொரியா ஆடைகளை வாங்க சீனா அதிரடி தடை விதித்தது

North-Korea-Costumes-Chinaவட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன் அந்நாடு உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.

வட கொரியா சமீபத்தில் 6-வது அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவை தொடர்ந்து தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.

இதன் அடிப்படையில், வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன், வட கொரியா உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

வட கொரியா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா ஒரு முக்கிய வர்த்தக நாடாக திகழ்ந்து வந்தது.ஆனால், தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது வட கொரியாவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் ஆடை உற்பத்தியை சீனா வாங்க மறுத்தால் அந்நாட்டிற்கு பெரும் வணிக இழப்பு ஏற்படும்.குறிப்பாக, வட கொரியாவின் ஆடைகளை சீனா வாங்க மறுத்தால் அந்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்.

அதே போல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் குறைந்துவிட்டால் வட கொரியாவில் பெட்ரோலியம் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com