ஐ.நா. சபையில் வடகொரிய அதிபரின் கொள்கைகள் முன்வைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தொடர்ந்து பேசினால் அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவை விரைவில் அழித்துவிடுவோம்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை வாஷிங்டன்: வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார். கடந்த செப் 3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும்,
ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளார். வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான பல தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வட கொரியாவை அழித்து விடுவேன் என டிரம்ப் மிரட்டினார். உடனே கிம் ஜாங் அன், “டிரம்புக்கு மனநிலை பாதித்து விட்டது, முதுமையினால் மனத்தளர்ச்சி அடைந்து விட்டார்” என விமர்சித்தார். அதற்கு டிரம்ப், “ கிம் ஜாங் அன் பைத்தியக்காரர். சொந்த மக்களையே பட்டினி போடுகிறார் அல்லது கொல்கிறார். இதுவரையில் இல்லாத வகையில் அவர் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்” என எச்சரித்தார்.
இப்படி ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவி விடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஐ.நா.சபையில் பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி, ‘டிரம்புக்கு மனநிலை சரியில்லை. அவரது மிரட்டல்கள் இரு நாடுகளுக்கிடையே ராணுவ மோதலை தூண்டிவிடுவதாக இருக்கிறது’, என பேசினார். மேலும் டிரம்பை ‘துக்கத்தின் தளபதி’, ‘பொய் மன்னர்’, ‘தீய அதிபர்’ என குறிப்பிட்டார். இதற்கு டிரம்ப் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.
அதில், “ஐ.நா.வில் வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி பேசியதை இப்போதுதான் கேட்டேன். அவர் குட்டி ராக்கெட் மனிதரின் எண்ணங்களை எதிரொலித்து பேசினால், அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள்”, என கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்த மிரட்டல் ஏற்கனவே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
-athirvu.com
அமைதிப்பூங்காவாக இருக்கும் இந்த மண்ணுலகை அழிக்கத் துடிக்கும் “இரு கிறுக்கன்களை” என்னவென்று சொல்வது ? இந்தத் தருதலைகளை சுட்டுத் தள்ளினாலும் பாபமில்லை ! அனைவரையும் கருணையுள்ளம் கொண்டு அரவணைத்த அன்னை தெரசா அவதரித்த இந்த பூமியில், இந்த மூடர்களும் பிறப்பெடுத்தது நமது துரதிஷ்ட்டமே.