யங்கூன், மியான்மரில் ராகின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் அங்கு வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.
ரோகிங்யா தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் ராகின் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 4 லட்சத்து 30 ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கலவரம் நடந்த ராகின் மாகாணத்தில் 28 இந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள்
அனைவரும் புதைக்கப்பட்டுள்ளனர்.
2 புதை குழிகளை யா பா கயா என்ற கிராமத்தில் ராணுவம் கண்டு பிடித்தது. கொல்லப்பட்ட இந்துக்களில் 20 பெண்கள் 8 ஆண்களும் அடங்குவர். அவர்களில் 6 மற்றும் 10 வயது சிறுவர்களும் அடங்குவர். இவர்களை ரோகிங்யா தீவிரவாதிகள் கொன்று புதைத்ததாக ராணுவ தளபதி ஒரு இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.
-dailythanthi.com