கொல்லப்படவில்லையா பக்தாதி? புதிய ஒலிப்பதிவு வெளியானது

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் குரல் எனச் சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்றை, ஐ.எஸ்.ஸுடன் தொடர்புள்ள இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், பக்தாதியினது என்று நம்பப்படும் அந்தக் குரல், ஜப்பான் மற்றும் அமெரிக்கா மீதான வடகொரியாவின் பயமுறுத்தல் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறது.

மேலும், கடந்த ஜூலை மாதம் ஐ.எஸ். வசமிருந்த மொசூல் ஈராக் வசமாகியிருப்பது குறித்தும் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தாதியின் குரல் போலவே தோன்றுவதாலும், இதுவரை பக்தாதி கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறாததாலும் இது பக்தாதியின் குரலாக இருக்கலாம் என்று அமெரிக்க இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டொலர் பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின் பக்தாதி வெளிவரவே இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

-athirvu.com