பிரதமர் அலுவலகத்தில் ‘எச்’ என்ற பெயரில் எவருமில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் தெங்கு சரிபுடின் தெங்கு அஹ்மட் கூறினார்.
“அந்தப் பெயர் கொண்ட அதிகாரி எவரும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை அப்படி எவரும் பிரதமருக்கு வேலை செய்யவுமில்லை”, என சினார் ஹரியானிடம் அவர் தெரிவித்தார்.
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் தலைவர் சைட் சித்திக் அப்துல் ரஹ்மான் தான் கட்சியிலிருந்து விலகி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேல்கல்வியைத் தொடர் பிரதமரின் அதிகாரிகளில் ஒருவரான ‘எச்’ என்பவர் ரிம5மில்லியன் ரொக்கம் கொடுக்க முன்வந்தார் என்று கூறியிருப்பது குறித்து அவர் இவ்வாறு சொன்னார்.
அம்னோவுக்கு போட்டியாக விளங்கும் Bersatu-வை உடைப்பதற்கு, அதிலுள்ள முக்கிய புள்ளிகள் (மக்களின் பணத்தால்) விலைபேசப்படுகிறார்கள் ! பிரிந்துபோன சிலர், விலைபோனவர்களோ என்ற சந்தேகம் எழுகிறது. கொள்ளைபோன பணம் கொள்ளையனுக்கு கோட்டையாய் விளங்குகிறது………?
தில்லுமுல்லு ஆரம்பமாகிவிட்டது.