பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் எந்தஒரு நடவடிக்கைக்கும் தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் அரசு பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது.
அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை அமெரிக்கா தொடர்ச்சியாக நெருக்கிவருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானிற்குள் நடவடிக்கை எடுக்கவும் தயார் என அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது.
இப்போது பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் எந்தஒரு நடவடிக்கைக்கும் தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றாலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தாலும் எந்தஒரு தேவையான நடவடிக்கையும் எடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தயார் என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர்
ஜேம்ஸ் மேட்டிஸ் பேசிஉள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தவறினால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் எனவும், நேட்டோ அல்லாத கூட்டணி என்ற நிலையை பாகிஸ்தான் இழக்கும் எனவும் மேட்டீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்க பாராளுமன்றத்தின் வலிமை மிக்க பாதுகாப்பு குழுவில் தெற்காசிய மற்றும ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேசுகையில் இவ்வாறு பேசிஉள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரிடம் எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர்.
-dailythanthi.com