புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ இப்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியம் இல்லை என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் கூட்டு சங்க சபா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி- தலதா மாளிகையில் இன்று நடந்த துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடலை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இத்தகையதொரு முடிவை சங்க சபா எடுத்திருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசரமாக பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து, நிலைமையை விளங்கப்படுத்தியிருந்தார்.
எனினும், அரசியலமைப்பு மாற்றத்துக்கு மல்வத்த பீடாதிபதி சாதகமான கருத்துக்களையே வெளியிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர், அஸ்கிரிய பீடாதிபதியை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல சந்தித்த போதும், அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வது பொறுப்பற்ற செயல் என்று கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-puthinappalakai.net