கேட்டலோனியா தலைவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஸ்பெயின்

கேட்டலோனியா கடந்த வாரம் ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, கேட்டலோனியா தலைவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை ஸ்பெயினின் அரசு தலைமை வழக்கறிஞர் சுமத்தியுள்ளார்.

கேட்டலோனியா தலைவர்களின் அரசியலமைப்பற்ற நடவடிக்கைகள் நெருக்கடியை உள்ளாக்கியுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மஸா கூறியுள்ளார்.

ஸ்பானிஷ் சட்ட அமைப்புப்படி, இந்தக் கோரிக்கை நீதிபதியால் பரிசீலிக்கப்படும்.

கேட்டலோனியாவில் ஸ்பெயினின் நேரடி தலையீடு வந்தபிறகு, கேட்டலோனியா அரசு ஊழியர்களுக்கு பதிலாக ஸ்பெயின் அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் இக்கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெயின் அரசியலமைப்பின் கீழ், சட்டவிரோதமாகக் கருதப்படும் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியதற்காக, நிதிகளைத் தவறாக பயன்படுத்துதல் குற்றச்சாட்டும் கேட்டலோனியா தலைவர்கள் மீது பதிவு செய்யப்படும் என ஜோஸ் கூறியுள்ளார்.

பணிக்குத் திரும்ப வேண்டாம் என ஸ்பெயினின் உத்தரவை கேட்டலோனியா அதிகாரிகள் மீறியபோதும், திங்கள்கிழமையன்று கேட்டலோனியாவில் பணிகள் வழக்கம் போல நடந்தன.

ஏதேனும் அமைச்சர் அலுவலகத்திற்கு வந்தால், ”நடவடிக்கை” எடுக்கப்படும் கேட்டலோனியா பிராந்திய காவல்துறையான மோஸோசால் மிரட்டப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தை கலைத்த ஸ்பெயின் அரசாங்கம் கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

-BBC_Tamil