பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மோசமான வானிலை, எம்இடி எச்சரிக்கிறது

 

இன்று இரவு வரையில் பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இடி மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை இலாகா (எம்இடி) இன்று தெரிவித்தது.

அவ்விலாகா அளித்த தகவலின்படி, கிரியான்; லாருட், மாதாங் & செலாமா; உலு பேராக்; கோலகங்சார்; கிந்தா; கம்பார்; முவாலிம் மற்றும் பத்தாங் பாடாங், கேமரன் மலை; லிப்பிஸ், ரவுப், பெந்தோங் மற்றும் தெமெர்லோ ஆகிய இடங்கள் வானிலை மோசமாக இருக்கும்.

கிளந்தானில், ஜெலி, லோஜிங் மற்றும் குவாங் மூசாங் ஆகிய இடங்களிலும் வானிலை மோசமாக இருக்கும்.