ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தன்னுயிரை தியாகம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரியை ரியல் ஹீரோ என அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் காபூலில் கடந்த 16 ஆம் திகதி தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதல்தாரி ஒருவர் கூட்டத்தினை நோக்கி ஓடிவந்துள்ளார்.
இதனைப்பார்த்த Sayed Basam என்ற பொலிஸ் அதிகாரி, மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தாக்குதல்தாரியை இறுக கட்டியணைத்து வேறு பக்கம் திசை திருப்ப முயன்றுள்ளார்.
இருந்தபோதிலும், குண்டுவெடித்து சிதறியதில் பொலிசார் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பொலிசின் செயலால் அங்கிருந்த பலர் உயிர்தப்பியுள்ளனர்.
தற்கொலைப்படை தாக்குதல்தாரியை கட்டியணைத்து பல உயிர்களை காப்பாற்றிய இவர் ரியல் ஹீரோ என அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரியின் தந்தை கூறியதாவது, இந்த பணியில் எனது மகன் முழுமையாக செயல்பட்டு தன்னுயிரை தியாகம் செய்துள்ளது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
-athirvu.com