இரண்டரை வாரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் இருந்தபோது எதிர்பாராத விதமாக வெளியிட்ட பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக லெபனான் பிரதமர் சாட் ஹாரிரி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலைமை பற்றி ஆலோசனை நடத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாக தெரிவித்த அதிபர் மிஷேல் ஓனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் ஹாரிரி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க தான் அவர்களுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
பெய்ரூட்டில் இருந்து திரும்பி வந்த ஒரு நாளுக்கு பின்னர் நடைபெற்ற லெபனான் சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஹாரிரி பங்கேற்றுள்ளார்.
பிரதமர் ஹாரிரி லெபனான் திரும்பிய பின்னர், அவரும் அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சௌதி அரேபியா தன்னை பதவி விலக செய்தது என்று கூறப்படுவதையும், இரானின் செல்வாக்கை தடுக்கும் முயற்சியாக தன்னை தடுத்து வைத்திருந்தது என்பதையும் ஹாரிரி மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஹாரிரி உருவாக்கிய தேசிய ஐக்கிய அரசில் ஹெஸ்புல்லா ஒரு பகுதியாக உள்ளது. -BBC_Tamil