வடகொரியாவுடன் உறவை துண்டிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி..

தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதால், அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷ்யா மறுத்துள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறுகையில்,

‘வடகொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதை பாதகமாகவே நினைக்கிறோம். கடும் பொருளாதார தடைகளை, விதித்து வடகொரியாவை தூண்டிவிட்டதே அமெரிக்காதான்.

தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியாவை அழிக்க நினைக்கிறதா அமெரிக்கா? அமெரிக்காவின் நோக்கம், வடகொரியாவை அழிப்பதற்கான காரணத்தினை தேடுவதா?

அப்படி என்றால் அதனை அமெரிக்கா உறுதி செய்யட்டும்’ என தெரிவித்துள்ளார்.

-athirvu.com