குர்திஷ் இன மக்களும் புலிகளுடன் தான்: லண்டனில் நடந்த கூட்டத்தில் அதிரடியான நிகழ்வுகள்..

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாளான இன்று(14) லண்டனில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் குர்திஷ் இன விடுதலைக்காக நீண்ட நாட்களாக, குரல் கொடுத்துவரும், Dr.Ibrahim ,  Dr.Mohammad Kayani,   Dr.Ayar Ate  ஆகிய 3 செயல்பாட்டாளர்கள் , தமிழீழ செயல்பாட்டாளர்களோடு கலந்துரையாடியுள்ளார்கள். இதில் பிரபல ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், மற்றும் விடுதலைக்கான செயல்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். 1961 ஆண்டில் இருந்து குர்திஷ் இன மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடி. தற்போது அரசியல் வழியில் தமது சுதந்திரத்திற்காக போராடி வருகிறார்கள். இந்த அனுபவங்களை அவர்கள் தமிழர்களுடன் பகிந்து கொண்டதோடு இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆராய்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கதை கண்டு நான் வியந்தது உண்டு என்று கூறிய டொக்டர் மொகமெட் கயினி(முன் நாள் MP). விடுதலைப் புலிகளின் வீரத்தை பாராட்டினார். எதிரிகளிடம் பிடி பட்டால், சயனைட் அடிப்பது என்பதனை கண்டு நான் வியந்துள்ளேன் என்று கூறிய அவருக்கு. பெண்களுக்கு விடுதலைப் புலிகள் சம உரிமையைக் கொடுத்திருந்தார்கள் என்றும். தலைவர் பிரபாகரன் தமிழீழ பெண்களுக்கு பல தலைமை பதவிகளை கொடுத்தார் என்ற செய்தியையும் தமிழர்கள் வழங்கி இருந்தார்கள். பல ஆக்கபூர்வமான சமகால அனுபவங்களை இரு இனங்களும் பகிந்து கொண்டதோடு. விடுதலை தொடர்பான விடையங்கள் பலவற்றை விரிவாக அலசி ஆராய்ந்தும் உள்ளார்கள்.

விடுதலைப் போரில் ஏற்படும் தடைகள். இனங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாகவும் இன்றைய தினம் ஆராயப்பட்டது. மேலதிக சந்திப்புகளை மேற்கொள்ளவும். தமீழீழ குழு ஒன்று குர்திஷ்தான் சென்று. அங்குள்ள தற்காலிக அரசு பற்றி அறியவும் இனக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

தமிழர்களை பொறுத்தவரை நாம் சிங்கள ஆதிக்க சக்தியிடம் இருந்தே விடுதலை பெற முயற்ச்சித்து வருகிறோம். ஆனால் குர்திஷ்தான், துருக்கி, ஈரான், ஈராக் போன்ற பல நாடுகளுக்கு மத்தில் இருக்கும் ஒரு தேசம். இன் நாடுகள் அனைத்துமே குர்திஷ் இன மக்களை அடக்கி ஒடுக்கவே நினைக்கிறது. இத்தனை நாடுகள் போடும் தடையைக் கடந்து அவர்கள், ஒரு சுதந்திரத்தை பெறவேண்டும் என்று போராடி வருவது. உலக அரங்கில் சுதந்திரத்திற்காக போராடி வரும் பல இனங்களுக்கு இவர்கள் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. எனவே இவர்கள் போன்ற அனுபவம் மிக்க, செயல்பாட்டாளர்களோடு தமிழர்கள் தொடர்புகளை பேண ஆரம்பித்துள்ளமை.  எமது விடுதலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவும்.

-athirvu.com

TAGS: