வடக்கு முதல்வரையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துன் அப்துல் ரசாக், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்கா செல்லும் மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்று  மலேசிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் அந்தச் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை.

-puthinappalakai.net

TAGS: