பாம்பு தீண்டியதால் 400 பேர் உயிரிழப்பு

இலங்கையில் வருடத்திற்கு 400 பேர் பாம்பு தீண்டுவதால் உயிரிழப்பதாக புதிய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

களனி பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்துடன், பாம்பு தீண்டுதலுக்கு இலக்காகி வருடாந்தம் 80,000 பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

நாட்டின் சகல வைத்தியசாலைகள், வைத்திய மத்தியநிலையங்கள், ஆயர்வேத நிலையங்கள் என்பவற்றை மையப்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாம்பு தீண்டலுக்கு இலக்காகி பாதிக்கப்படுபவர்களுக்காக வருடாந்தம் 1.5 பில்லியன் ரூபாவை  அரசாங்கம் செலவு செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-tamilmirror.lk

TAGS: