கெய்ரோ,
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ள ஹெல்வான் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வாயிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் பயங்கரவாதியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், அதற்குள் பயங்கரவாதி தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரிமாரியாக சுட்டுள்ளான். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில், 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் உடலில் வெடிகுண்டுகள் அடங்கிய பெல்ட் இருந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எகிபதில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டுகளில் இது போன்று நடைபெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
-dailythanthi.com