வடக்கு- கிழக்கு இணைப்பு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் நிகழ வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

“வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு வேண்டும் என்று வெறுமனே கூறினால் அது முஸ்லிம் மக்களின் மனதைப் பாதிக்கும். ஏனென்றால், தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அப்படி எவ்வாறு கூறமுடியும் என்று அவர்கள் சிந்திப்பார்கள். அதனால்தான் நாங்கள், வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் நிகழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இணையும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. ஆனால், வடக்கு- கிழக்கு இணைப்பை வெறும் கோஷமாக முன்வைப்பவர்கள் அதனைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். வடக்கு- கிழக்கு இணைப்பை தடுப்பதற்காக பச்சை பச்சையாக பிரதேசவாதத்தையும் கக்குகின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: