அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கு கூட்டு அரசாங்கம் தொடர வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
அண்மையில் பலவேறு பிரச்சினைகள் எழுந்துள்ள போதிலும், அரசாங்கம் முன்நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும் என்பதே, கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் கூட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அது ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாது. அதற்காக, ஊழல் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டு அரசாங்கத்தினால், பல முன்னேற்றகரமான மாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலகத்தில் நடந்த பொங்கல் விழாவில், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.
-puthinappalakai.net