“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சித்த போதும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருந்தது.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலிருந்து நான் இன்னும் பின்வாங்கவில்லை. அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்காக என்னால் விடுக்கப்பட்ட அழைப்புகளை கடந்த காலத்தில் இரா.சம்பந்தன் நிராகரித்தே செயற்பட்டார்.
தாமரை மொட்டு சின்னத்தில் எனது தலைமையின்கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியல் சக்தியாக மாற்றமடையுமாக இருந்தால் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பொன்றை உருவாக்குவேன். புதிய அரசியலமைப்பொன்றை இந்த அரசு உருவாக்கினாலும் அனைத்து இன மக்களின் அங்கீகாரத்துடன் மட்டுமே அதனை மேற்கொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com