உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயாராம்!

ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவ்வாறானதொரு சூழ்நிலையினை எதிர்நோக்க இலங்கைத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச.

குறிப்பாக உலகப் போர் ஏற்பட்டால் இலங்கையில் ஏற்படக் கூடிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கக் கூடிய திட்டங்கள் காணப்படுவதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு தற்போதைய மகிந்த தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்றங்கள் சுமத்தப்பட்ட வேளையில் ஐ.நா-வை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்பாட்டத்தில் விமல் வீரவன்ச ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவர் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து உண்ணாநோன்பு இருந்தார். ஆனால் அவர் உண்ணாநோன்பு இருந்த இடத்தில் உணவுப் பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின என்பதும் மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

TAGS: