கணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எம்பிசி தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் வாலீட் அல்-இப்ராஹிம் மற்றும் அரசு நீதிமன்ற முன்னர் தலைவர் காலிட் அல்-துவாஜிரியும் இவர்களில் அடங்குகின்றனர்.

அவர்கள் அரசுக்கு கணிசமான நிதித்தொகை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எவ்வளவு வழங்கப்பட்டது என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

200க்கு மேலான இளவரசர்கள், பணக்கார வணிகர்கள் இந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்க்கைக்கு பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியத்திலுள்ள ரிட்ஸ் கரல்டன் ஹோட்டல், பிப்ரவரி 14ம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இவர்கள் அதிக தொகை வழங்கிய பின்னரே விடுவிக்கப்பட்டிருப்பர் என்று தோன்றுகிறது. -BBC_Tamil