இலங்கையில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்த மைத்திரிக்கு வலியுறுத்து
இலங்கையில் முன்னர் இடம்பெற்ற முக்கிய படுகொலைகளான மகேஸ்வரன், லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜூடின் ஆகியர்களது கொலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாரபட்சமின்றி இதில் விரைந்து ஈடுபட்டால் நாட்டு மக்கள் மற்றுமொரு தடவை அவரை ஜனாதிபதி ஆக்குவார்கள் என்றும் ஹெரிசன் கூறியுள்ளார். பொலன்னறுவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தின் போதே இவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதைவிட ஊழல் மோசடிகளுக்கு எதிரான கொள்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக இருப்பதாகவும் இது தொடர்பில் அதிபர் சிறிசேன எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது கட்சி பூரண ஆதரவை அளிக்கும் என்றும் ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார். ஹெரிசன் தனது பிரச்சாரத்தின் போது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரின் தரப்பினர் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதையும் சுட்டிக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.