பெய்ரூட்,
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க சிரிய அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படையினர் சிரிய அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக தற்காப்பிற்காக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் அமெரிக்க கூட்டணி படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம் என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஐ.நா. சபைக்கு சிரிய வெளியுறவு அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், அமெரிக்க கூட்டணி படையை சட்டவிரோதம் என்றும் அதனை கலைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
-dailythanthi.com
சிரியாவில், அமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல்: 100 அரசு ஆதரவு படை வீரர்கள் பலி..
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் உயிரிழந்தனர்.
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று குஷாம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டுப் படையின் முகாம்களை குறிவைத்து சுமார் 500 அரசுக் ஆதரவு படையினர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அமெரிக்கா கூட்டுப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 பேர் பலியானதாக அமெரிக்கா கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வீரர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளதாக சிரியா அரசு ஆதரவு படையினர் தெரிவித்துள்ளனர்.