தேர்தலில் மகிந்த அமோக வெற்றி: மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் மூக்கை உடைத்தார் மகிந்தர் !

கசப்பான உண்மை தான்… ஆனால் நேற்று முன் தினம் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில், மகிந்த ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன என்ற கட்சி சுமார் 46% சதவிகித வாக்குகளை பெற்று பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி வெறும் 30% சதவிகித வாக்குகளையும், மைத்திரி பால வின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு படு கேவலமாக தேற்று சுமார் 9% சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

மகிந்த அமைத்துள்ள புதிய கூட்டமைப்பு கட்சிக்கே சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. இதனை வெளிநாடுகள் உட்பட மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா உட்பட , இந்தியா போன்ற நாடுகள் இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தற்போது இருக்கும் நிலவரப்படி, இனி நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இதே போல மகிந்த அமைத்துள்ள கட்சி வெற்றி பெற்றால். மகிந்த சுட்டு விரலால் காட்டும் நபரே இலங்கை ஜனாதிபதியாக வருவார் என்ற நிலை தோன்றியுள்ளது.

சுருக்கமாக சொல்லப் போனால் மீண்டும் மகிந்த ஆட்சியே ஏற்பட உள்ளது. மகிந்த ஜனாதிபதியாக இனி போட்டியிட முடியாது. இதனால் அவர் நிச்சயம் கோட்டபாயவை மற்றும் தனது மகன் நமால் ராஜபக்ஷ்வை, நிச்சயம் முன் நிலைப் படுத்தி செயல்படுவார். இன் நிலை நீடித்தால் அடுத்த இலங்கை ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ நிச்சயம் வர வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் தமிழர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. காரணம் என்னவென்றால் , மீண்டும் மகிந்த தலை தூக்கினால் , அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் அதனை விரும்பாது. எனவே அவை தமிழர்கள் பக்கம் சாரும்.

தற்போது உள்ள அரசு, தமிழர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழர்களுக்கு சம உரிமையை வழங்க உள்ளது என்ற பிரச்சாரத்தில் தான் மகிந்த ஈடுபட்டு இருந்தார். உடனே சிங்களவரிடம் இருந்து அவருக்கு உடனடியாக ஆதரவு கிட்டியுள்ளது. இனி இலங்கையில் என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை…

-tamilmirror.lk
TAGS: