அஸ்மின்: ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எம்ஏசிசி-இடம்

சிலாங்கூர்   அரசு  ஈஜோக்  நில  விவகாரம்  தொடர்பான    ஆவணங்கள்  எல்லாவற்றையும்   மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையத்திடம்   ஒப்படைத்து  விட்டதாக    மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்   அலி   கூறினார்.

சம்பந்தப்பட்ட    நிலம்மீது   விசாரணை   தேவை  என்று   அரசுசாரா   அமைப்புகள்  பல   புகார்  செய்ததை   அடுத்து   ஆவணங்கள்  எம்ஏசிசி-இடம்  ஒப்படைக்கப்பட்டன   என்றாரவர்.

“மாநில   அரசு   முழு  ஒத்துழைப்பைக்  கொடுத்துள்ளது.  இனி,  விசாரணை  முடிவுக்காகக்  காத்திருப்போம்”,  என்றவர்   இன்று   ஷா   ஆலமில்   கூறினார்.

நேற்று,  பாரிசான்   நேசனல்   (பிஎன்)  வியூக  இயக்குனர்   அப்துல்   ரஹ்மான்  டஹ்லான்   ஈஜோக்கில்  சர்ச்சைக்குரிய   ரிம1.18பில்லியன்  மதிப்புள்ள   நிலத்தை  மாநில  அரசு  “அவசரப்பட்டு”   இரண்டு   வீடமைப்பு  மேம்பாட்டாளர்களிடம்  திருப்பிக்  கொடுத்தது   ஏன்  என்று   கேட்டிருந்ததற்கு   எதிர்வினையாற்றிய   அஸ்மின்  இவ்வாறு  கூறினார்.

-பெர்னாமா