ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது.
இதனை அடுத்து, டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த 66 பேரும் பலியானதாக ஈரான் அஸீமான் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
-athirvu.com