சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்பு பகுதியை “பூமியிலுள்ள நரகம்” என்று வர்ணித்து, அங்கு நடைபெற்று வருகின்ற மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கிழக்கு கூட்டா பகுதியில் சண்டை முடியும் என்று காத்திருக்க முடியாது என நான் நம்புகிறேன்” என்று அன்றோணியோ குட்டிரஸ் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலின் ஆதரவோடு, சிரியா அரசு படைப்பிரிவுகள் கிழக்கு கூட்டா பகுதி கடும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி முக்கிய பகுதி இதுவாகும். -BBC_Tamil