மரியா சின் அப்துல்லா சமூக அமைப்பு ஒன்றிலிருந்து விலகி அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கலாம். 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் ஒரு சுயேச்சை உறுப்பினராகத்தான் செயல்படுவார்.
பெர்சே தலைவர் பதவியிலிருந்து விலகிய மரியா சின் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் தேர்தலில் களமிறங்க முன்வந்துள்ளார். ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் அவருக்கு இல்லை.
மக்களவையில் “சீரமைப்புத் திட்டங்களை”க் கொண்டு வரும் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் கட்சி அரசியல் தமக்குச் சரிப்பட்டு வராது என்றவர் நினைக்கிறார்.
“சீரமைப்புத் திட்டங்களைக் கொண்டுவர நான் சுயேச்சையாக இருப்பதே நல்லது.
“எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை”, என இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் மரியா சின் கூறினார்