தேரா இஸ்மாயில் கான்,
ஆப்கானிஸ்தானின் குனார் பகுதியில் பாகிஸ்தான் தலீபான் தலைவர் முல்லா பஸ்லுல்லா பதுங்கி உள்ளார் என கிடைத்த தகவலையடுத்து அமெரிக்காவின் 2 ராக்கெட்டுகள் அங்கு கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பஸ்லுல்லாவின் மகனும் ஒருவர். சம்பவம் நடந்தபொழுது, பஸ்லுல்லா அங்கு இல்லை.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் மற்றும் தீவிரவாதிகள் பலி ஆகியவற்றை பாகிஸ்தான் தலீபான் அமைப்பின் 3 தளபதிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று பாகிஸ்தான் உளவு பிரிவு அதிகாரிகளும் தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளனர். தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என கூறிய அவர்கள் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுவதற்கு தங்களுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அமெரிக்கா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
-dailythanthi.com

























