பிரிட்டன் மண்ணில் நுளைந்து, தனது திருகுதாளத்தை காட்டியுள்ளது ரஷ்யா. பெரும் பனிப் போர் ஒன்று மூண்டுள்ளது. 2006ம் ஆண்டு ரஷ்ய ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் இருந்த ஸ்கிரிப்பால் என்னும் நபர். பிரித்தானிய உளவுப்படையான எம்.ஐ.5 க்கு பல தகவல்களை வழங்கி பிரித்தானியாவுக்கு உதவினார். இதனை எப்படியோ கண்டறிந்த ரஷ்யா அவரை பிடித்து சிறையில் இட்டது. பின்னர் 2010ம் ஆண்டு ரஷ்ய உளவாளி ஒருவரை பிரிட்டன் கைதுசெய்தது. இதனை அடுத்து கைதிகள் பரிமாற்றம் ஒன்று ரகசியமாக இடம்பெற்றது. தாம் கைது செய்த ரஷ்ய உளவாளியை பிரிட்டன் ரஷ்யாவுக்கு கொடுக்க. முன்னர் தமக்கு உதவிய ஸ்கிரிப்பாலை, பிரிட்டன் பெற்றுக்கொண்டது.
அவரை லண்டனுக்கு வெளியே ஒரு பத்திரமான இடத்தில் குடி அமர்த்தினார்கள் பிரித்தானிய உளவாளிகள். அவரது பெயர் தொடர்க்கம் அனைத்தும் மாற்றப்பட்டு. அவர் அடையாளத்தையே அளித்து புது நபராக உருமாற்றி அவரை பிரித்தானியாவில் தங்கவைத்தார்கள் எம்.ஐ.5 உளவுப் பிரிவினர். சுமார் 8 ஆண்டுகள் கழித்து, அவரது மகள் பல நாடுகளுக்கு சென்று பின்னர் இறுதியாக லண்டன் வந்து, தனது அப்பாவை பார்க்கவேண்டும் என்று கேட்டார். மிக மிக ரகசியமான முறையில் பிரித்தானிய உளவுப் படை பிரிவு அவரை அப்பா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
அன்றைய தினம் அவர்கள் சென்று ஒரு உணவகத்தில் உணவை உட்கொண்டுவிட்டு. பின்னர் அருகில் உள்ள PUB (மதுச்சாலை) சென்று ஒரு கிளாஸ் பியர் அடித்துள்ளார்கள். அவ்வளவு தான் உடனே நிலத்தில் விழுந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் நிலையைக் கண்ட வேலையாள், அம்பூலஸ்சுக்கு போன் அடித்துள்ளார். ஆனால் முதலில் அங்கே சென்றது பொலிஸார் தான். குறித்த பொலிஸ் அங்கே சென்று அவரை தூக்க முயற்ச்சி செய்தவேளை, அவரும் திடீரென நிலத்தில் வீழ்ந்து இவர்களை போல வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் பெரும் பராபரப்பு ஏற்படவே , மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டதோடு, பகுப்பாய்வு செய்யும் , மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் அங்கே வரவளைக்கப்பட்டார்கள்.
உடனே அங்கே சென்ற எம்.ஐ. 5 சிறப்பு படைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில். பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இவர்களை ஒரு நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார். அவர் பப்பிற்கு சென்று இவர்கள் அருகே உட்கார்ந்துவிட்டு எழுந்து சென்ற சில நொடிகளில் இவர்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். குறித்த நபர் ரஷ்ய உளவாளி என்றும். அவர் ரஷ்யாவில் இருந்து இந்த நச்சு வாயுவை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்து உபயோகித்துள்ளார் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இதனை விட ஸ்கிரிப்பாலின் மனைவி ரஷ்யாவில் தங்கியிருந்த வேளை அவருக்கு திடீரென ஈரல் கெட்டுப் போய் மரணம் அடைந்தார். அதுபோக அவரது மகனும் ஒரு வாகன விபத்தில் இறந்து போனார்.
பார்பதற்கு எல்லாமே தற்செயலாக நடந்தது போல இருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்டு ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டினால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் என்பது தற்போது தான் துலங்குகிறது. எஞ்சி இருந்த மகளையும் அப்பாவையும் லண்டனில் வைத்து கொல்ல ரஷ்ய உளவுப் படையான KGB திட்டம் தீட்டியுள்ளது. தற்போது , அப்பா , மகள், மற்றும் குறித்த பொலிஸ்காரர் ஒருவரும் என மூவர் கோமா நிலையி வைத்தியசாலையில் உள்ளார்கள். அவர்கள் எந்த வகையாக நச்சுக் காற்றை சுவாசித்தார்கள் என்பதனை கூட இதுவரை லண்டன் மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனை பாவித்த ரஷ்ய உளவாளி பிரிட்டனில் தான் உள்ளார். அவரையும் கண்டு பிடிக்க முடியாத நிலையில். பெரும் சிக்கலில் உள்ளது பிரித்தானியாவின் உளவு படை.
ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டிகளில் பிரித்தானிய அரச குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொள்ள இருந்தார்கள். ஆனால் அவர்கள் இனி செல்வது என்பது பெரும் சந்தேகமே. ராஜதந்திர ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில். பெரும் பனிப் போர் ஒன்றும் உருவாகியுள்ளது. மனைவி ஈரல் வியாதியால் ரஷ்யாவில் இறந்ததை தாம் விசாரணை செய்ய உள்ளதாக பிரித்தானிய உளவு துறை அறிவித்துள்ளது, ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
-athirvu.com