உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் பட்டியல் வெளியீடு.. முதலிடம் எது தெரியுமா.?

உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது.

இதற்கு அடுத்த படியாக வெனிசுலாவின் கராகஸ் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3-வது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4-வது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா 5-வது இடத்திலும் உள்ளது.

இவை தவிர லாபாஷ் (மெக்சிகோ), 6-வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7-வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8-வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9-வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10-வது இடத்திலும் உள்ளது.

மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு சுமார் 205 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.

2017-ம் ஆண்டு அதிக குற்றச் செயல்கள் நடந்த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

-athirvu.com