20 நாடுகளில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..

முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்க்ரியாலும், அவரது மகளும் இங்கிலாந்தில் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாயினர். இந்த நடவடிக்கையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது புகார் கூறப்பட்டது. அதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இருந்தும் இங்கிலாந்து தன் நாட்டில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்றியது. ரஷியாவுடன் ஆன ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இந்த நிலையில் அமெரிக்காவும், ரஷியா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிபர் டொனால்டு டிரம்ப் 60 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றி உள்ளார். உளவுத்துறை அதிகாரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அவர்கள் 7 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார். மேலும் சியாட்டில் நகரில் உள்ள ரஷிய துணை தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து உக்ரைன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, செக் குடியரசு, லுதுவேனியா, நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின், சுவீடன், கரோடியா, ருமேனியா, பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா ஆகிய 20 நாடுகளும் ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உத்தரவிட்டுள்ளன.

21 நாடுகளில் இருந்தும் மொத்தம் 126 ரஷிய தூதர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

-athirvu.com