எம்பி: கெடாவில் ஹரப்பான் செராமாவுக்கு வந்த கூட்டம் மலாய் சுனாமிக்கு அறிகுறி

நேற்றிரவு   கெடாவில்  பக்கத்தான்  ஹரப்பான்  ஏற்பாடு  செய்திருந்த  ஒரு  செராமாவுக்கு  வந்த   15,000  பேரடங்கிய   கூட்டம்   எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்   மலாய்   சுனாமி  ஏற்படப்போவதற்கான   அறிகுறி   என்கிறார்   டிஏபி   எம்பி  லியு  சின்  தோங்.

முகநூலில்  பதிவிட்டிருந்த   குளுவாங்  எம்பி-ஆன  லியு,  அடக்குமுறை  நிலவும்   சூழலில்   மழையையும்     பொருட்படுத்தாமல்      அவ்வளவு  பெரிய  கூட்டம்   ஹரப்பான்  தலைவர்    டாக்டர்   மகாதிர்    முகம்மட்  கலந்துகொண்ட  அக்கூட்டத்துக்கு     வந்ததை  வைத்து   தாம்   அம்முடிவுக்கு    வருவதாகக்  கூறினார்.

ஊடகங்கள்   ஹரப்பான்  நிகழ்வுகளை)  இருட்டடிப்பு   செய்தாலும்   மக்கள்  கூட்டம்  திரள்வது   ஹரப்பான்    செல்வாக்குக்கு  ஓர்  அளவுகோல்   என்றாரவர்.

இதேபோல்,  அம்னோவின்  கோட்டையாக    திகழும்   ஜோகூரில்   கிராமப்புறங்களிலும்  பெல்டா   குடியேற்றப்   பகுதிகளிலும்    நடந்த  எதிரணி   செராமாக்களுக்குச்  சில  நூறு  பேர்    வந்திருந்தனர். ஈராண்டுகளுக்கு  முன்பு   அதை  நினைத்துக்கூட    பார்க்க  முடியாது    என்றார்