சொமாலியா: ஆஃப்ரிக்க ஒன்றிய தளத்தை தாக்கிய இஸ்லாமியவாத தீவிரவாதிகள்

சொமாலியாவில் உள்ள ஆஃப்ரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் தளம் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

புலமெரெர் நகரத்தில் உள்ள அமைதித் தளத்தின் வெளியே இரண்டு கார் குண்டுகளை அல் ஷபாப் போராளிகள் வெடிக்கச் செய்தனர்.

துப்பாக்கிச்சூடு சுமார் மூன்று மணி நேரம் நிகழ்ந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை. ஆனால், இதில் 20க்கும் மேற்பட்ட அல் ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டதாக சொமாலிய உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல்அசிஸ் அலி இப்ரஹிம் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: