டாக்டர் மகாதிர் முகம்மட் 14வது பொதுத் தேர்தலில் லங்காவியில் வெற்றி பெற்றால்கூட அதன் மேம்பாட்டுக்கு அவரால் எதுவும் செய்ய இயலாது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அசீஸ் கூறினார்.
கூட்டரசு அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் அவரால் அதிகமாக எதுவும் செய்ய முடியாது.
“எதிரணியில் உள்ள ஒருவருக்கு எப்படி உதவுவது? எனவே, அது அவருக்கு மட்டுமே நன்மையாக அமையும். (எம்பி என்பதால்) சம்பளம், அலவன்ஸ் கிடைக்கும்”.
பக்கத்தான் ஹரப்பான் மகாதிரை லங்காவியில் களமிறக்க செய்துள்ள முடிவு குறித்துக் கருத்துரைத்தபோது நஸ்ரி அவ்வாறு கூறினார்.
-பெர்னாமா