அம்னோ மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரயிஸ் யாத்திம் பக்கத்தான் ஹரப்பானுக்குப் பரப்புரை செய்ததற்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கவலை கொள்ளவில்லை.
அவரின் அடுத்த நடவடிக்கை குறித்து வினவியதற்கு அவ்விவகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
“காரணம் கேட்டு அல்லது கட்சி உறுப்பியம் இரத்துச் செய்யப்படுவதாகக் கூறும் கடிதம் எதையும் இன்னும் நான் பெறவில்லை.
“என் கருத்து இதுதான். அமைப்புவிதி 10 மீறப்பட்டிருப்பதால் அம்னோ சட்டத்தகுதி இழந்துவிட்ட ஒரு கட்சி.
“அந்த வகையில் இந்தக் கடிதம் சட்டப்படி என்னைக் கட்டுப்படுத்தாது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.