கயானா நாட்டு மீனவர்கள் 12 பேர் கொன்று குவிப்பு- கடற்கொள்ளையர் அட்டூழியம்..

தென்அமெரிக்க நாடான கயானாவில் இருந்து 4 படகுகளில் 20 மீனவர்கள் வடஅட்லாண்டிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அண்டை நாடான சுரினாம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் கயானா நாட்டு மீனவர்களை தாக்கினர்.

அவர்களிடம் இருந்து பணம், மீன்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 12 மீனவர்கள் உயிரிழந்தனர். 4 பேர் மட்டும் உயிர் தப்பினர். மற்றவர்களின் நிலை தெரியவில்லை.

இத்தகவலை கயானா நாட்டின் அதிபர் டேவிட் கிரங்கர் தெரிவித்தார். கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுரினாம் நாட்டுடன் இணைந்து கடற்கொள்ளையர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

-athirvu.com