கோட்டாபயவின் கொடூரங்களை வெளியிட்ட பொன்சேகா..

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரானகோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரானால்நிச்சயம் தோல்வியைத் தழுவுவார் என்றுஅவரது பரம எதிரியான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தப் போவதாக அவரது விசுவாசிகள் அறிவித்துவரும்நிலையில், இது குறித்து ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தின் வனஇலாகத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

அதற்கு பதிலளித்தபோதே சரத் பொன்சேகா இந்தத் தகவலைத்தெரிவித்ததுடன், கோட்டாபய ராஜபக்ச மிகவும் கொடூரமான படுகொலையாளி என்றும்,மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்ட மிகவும் மோசமான கொள்ளையர் என்றும்அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் பல இடங்களில் பெய்துவரும் அடை மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹாமாவட்டத்திற்கு விஜயம்செய்த அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் கோட்டாபய ராஜபக்சவின்அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா, கோட்டாபயராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வருவாரானல் அவருக்கான கட்டுப்பணத்தைதானே செலுத்துவேன் என்று குறிப்பிட்டார்.

எனினும் அந்த பணத்தை மறந்துவிட வேண்யதுதான் என்றுகூறிய சரத் பொன்சேகா, கோட்டாபய தோல்வியைத் தழுவுவதுநிச்சயம் என்பதால், கட்டுப்பணமாக செலுத்தும் பணமும் தனக்கு மீளக்கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கோட்டாபய ராஜபக்சவை கண்டு ஐக்கிய தேசியக்கட்சி அச்சமடைந்துள்ளதாக அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்தும்ஊடகவியலாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் வினவினர்.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போதுநாட்டில் பெரும்பாலானவர்கள் பயந்தே இருந்தனர் என்று தெரிவித்த சரத் பொன்சேகா, கோட்டாபயஅதிகாரத்தில் இருந்த போது வெள்ளை வான்களை அனுப்புவார் என்றும், கடத்திச் செல்வார் என்றும், காடையர்களை அனுப்பிதாக்குதல் நடத்துவார் என்றும் குற்றம்சாட்டினார்.

அதுமாத்திரமன்றி சொத்துக்களை கொள்ளையடித்து வந்ததால், அவர்பதவியில் இருந்தபோது நாட்டில் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் அவருக்கு பயந்தேஇருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமன்றிஅரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களும் கோட்டாபயவிற்கு பயந்தே இருந்தாகவும்சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும் தான் ஒருபோதும் ராஜபக்ச குடும்பத்திலுள்ளஎவருக்கும் பயந்து வாழவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும்தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: