யுத்த காலங்களில் இரானுவம், யுத்தக் குற்றங்களோ துஷ்பிரயோகங்களோ செய்ததில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம தெரிவித்துள்ளார்.
நேற்று (28) திங்கட் கிழமை திருகோணமலை பிரட்றிக் மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண படைவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், யுத்தகாலத்தின் போது தான் வெளிவிவகார அமைச்சராக இருந்ததாகவும் தனது காலப்பகுதியில்தான் யுத்தம் நடைபெற்றதாகவும், அதன்போது இரானுவம் யுத்தக் குற்றம் செய்ததாக கூறப்படுவதை முற்றாக மறுப்பதாகவும் கூறினார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
“அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கறிவேன். எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்து யுத்தகாலத்தில் உயிரிழந்த படைவீரர்களை இந்த நேரத்தில் நினைவுகூருகிறேன். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் உள்ள படை வீரர்களுக்காக இந்த அரசாங்கம்மூலம் வாழ்வாதார உதவிகள் உட்பட ஏனைய பொருளாதார வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீட்டுத் திட்டங்கள் போன்றனவும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களை சர்வதேசரீதியாக கௌரவிக்கவேண்டும். நாட்டு நலன்களுக்காகவும் நாட்டை பாதுகாக்கவும் ஒரே தேசம் ஒரே குரல் என்கின்றவாறு படைவீரர்கள் யுத்தகாலத்திலும்சரி தற்போதும்சரி செயற்பட்டுவருகின்றனர்கள். தாய்நாட்டைப் பாதுகாத்த அனைத்து படைவீரர்களுக்கும் மீண்டும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.” என்றார்.
-athirvu.in