கொழும்பில் ஹீரோவான தமிழ் இளைஞன்!

கொழும்பில் சிங்கள நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பிடித்துள்ளார்.

மஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் சிங்களவரை, மோட்டார் வாகனத்தினால் மோதி விட்டு தப்பி சென்றவரை தமிழ் இளைஞன் துரத்திப் பிடித்துள்ளார்.

மஹரகம மாநகர சபையின் பாதுகாப்பு அதிகாரி செயற்பட்ட ஒருவரே இவ்வாறு பாதிப்படைந்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி, சந்தேகநபரின் மோட்டார் வாகனத்தில் மோதுண்டன போது 68 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளார் என மஹரகம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாதுகாப்பு அதிகாரி மஹரகம மாநகர சபைக்கு முன்னால் உள்ள ஹய்லெவல் வீதியை கடக்கும் முயற்சித்துள்ளார். அங்கு கொட்டாவ பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற மோட்டார் வாகனம் ஒன்று பாதுகாப்பு அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதனை அவதானித்த மோட்டார் வாகனத்தின் தமிழ் சாரதி ஒருவர், தப்பிச் சென்ற சாரதியை துரத்தி சென்றுள்ளார். மஹரகம பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரை தமிழ் சாரதி மடக்கி பிடித்துள்ளார்.

மடக்கி பிடித்த சந்தேகநபரை தனது வாகனத்திலேயே ஏற்றி சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு தமிழ் சாரதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சந்தேகநபரை பரிசோதித்த போது அவர் அதிகளவு மதுபானம் அருந்தியிருந்தார் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருப்பையா நிர்மலசந்திரன் என்ற தமிழர் ஒருவரே சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சமகாலத்தில் வாகன விபத்துக்கள் தொடர்பில் சாட்சி வழங்குவதற்கே தயங்கும் நபர்களுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சாரதியை பிடிப்பதற்கு முயற்சித்த தமிழ் இளைஞனை பாராட்ட வேண்டும் என மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி புத்திக்க அபேகோண் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

-athirvu.in

TAGS: