மாணவர்களின் பள்ளிப் பையின் எடையைக் குறைக்க வழி காண்பதற்காக கல்வி அமைச்சு ஒரு பணிப்படையை அமைத்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில், இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பது பள்ளிகளின் பொறுப்பு என்று கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் கூறுகிறார்.
பள்ளிப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான வழியைக் காண்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பணிப்படை சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர்களின் கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று அவர் கூறினார்.
பைகளின் எடையைக் குறைப்பதற்கு சரியான வழியைக் காண்பதற்கான முழு அதிகாரமும் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.