வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சட்டவிரோதமாக 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
‘போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் பௌத்த விகாரைகள், வழிபாட்டு இடங்கள், புத்தர் சிலைகள் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில், பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் திட்டமிட்டு இந்த பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் வடக்கில் இத்தகைய 131 விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதிகபட்சமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து, வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் விகாரைகள் அமைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-puthinappalakai.net