மஇகா தலைவர் பழனிவேலின் தாயார் காலமானார்

மஇகா தலைவர் ஜி பழனிவேலின் தாயார் லெட்சுமி ஆறுமுகம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92.

கோலாலம்பூர் தாமான் மெலாவத்தியில் உள்ள பழனிவேலின் இல்லத்தில் நேற்றிரவு மணி 10.50க்கு லெட்சுமி காலமானதாக பழனிவேலின் பத்திரிக்கைச் செயலாளர் எம் கார்மேகன் கூறினார்.

லெட்மிக்கு இரண்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் பல பேரப் பிள்ளைகளும் இருக்கின்றனர். பிரதமர் துறை அமைச்சரான பழனிவேல் இளையவர் ஆவார்.

பினாங்கு ஜார்ஜ் டவுன், எண் 20 ஜாலான் சுங்காயில் உள்ள குடும்ப இல்லத்துக்கு லட்சுமியின் நல்லுடல் இன்று காலை கொண்டு செல்லப்பட்டது என கார்மேகன் தெரிவித்தார்.

பத்து லஞ்சாங் மின்சுடலையில் நாளை பிற்பகல் 2 மணிக்குத் தகனம் செய்யப்படும்.

-பெர்னாமா

TAGS: